எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
அப்பாடா! அநீதி தூக்கில் தொங்கப் போகின்றது!
Dienstag, Oktober 30, 2007

மூன்று பசாசுகள் விரைவில் தூக்கிலிடப்பட தீர்ப்பளிக்கப்பட்டு இருப்பதாகத் தமிழகத்திலிருந்து வருகின்ற செய்தி கூறுகின்றது.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டதை ஆட்சேபித்து வெறிநாய்களாக குதித்துத் திரிந்த பல அரசியல்வாதிகளுக்குள்ளிருந்து தலைவிரித்து வெறி பிடித்தாடிய மிக மோசமான மூன்று கீழ்தரமானவர்களுக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. நீதியின் அதிர்ஷ்டமோ என்னமோ, இந்த அரிய, அற்புதமான தீர்ப்பு வெளியாகுகையில் ஆட்சி அம்மையாரின் கைகளில் இல்லாமல் தமிழகம் கலைஞர் கைகளில் தப்பி இருக்கின்றது.

அவர் மட்டும் இவ்வேளையில் ஆட்சியில் இருந்திருந்தால் இவர்கள் புது வழிகளில் வெளியே வந்து குதித்து, மலர் மாலை சூட வலம் வந்து களை கட்டியிருப்பார்கள்.

கொலைகாரர்களுக்குக் கலை விழாக்களும் வெற்றி விழாக்களும் இனிப்பு வழங்கல் கொண்டாட்டங்களுமாக தமிழகமே விழா மண்டபங்களால் நிறைந்திருக்கவும் கூடும்.

மரண தண்டனை என்பது மனித நாகரீகத்துக்கு ஏற்காதது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. எத்தனையோ அப்பாவிகளை அநீதியால் முன்னேறத் துடிக்கும் கொலைக்கு அஞ்சாத, அதனை விரும்பும் சட்ட நாயகர்கள் தங்களின் சட்ட அறிவின் துர்ப்பயன்படுத்தல்களால் மரணத்தில் தள்ளி விட்டு, பணத்துக்காகப் பல படுபயங்கர பணக்கார கொலைகாரரைப் பாதுகாப்பதும் இரக்கமே அற்ற சுயநலமிக்கஅரசியல்வாதிகளும் கூட இந்தத் தண்டனையை வைத்துத் தமது சுயவெற்றிகளுக்கு வழியமைத்துக் கொள்கின்றனர் என்பதும் ஒன்றும் இரகசியமல்ல.

ஆனால் இதனை ஒரேயடியாக ஒழித்து விடுதல் நல்லதுதானா என்பதே இத்தகைய படுமோசமான கொலைகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகையில் நியாயத்தை விழைகின்ற சாதாரண பொதுமக்களும் சமுதாய நலன் விரும்பிகளும் தங்களுக்குள் எழுப்பிக் கொள்ளக் கூடிய கேள்வியாகும்.

அ.தி..மு.க. தலைவிக்குச் சிறையென்றால், அதற்காக எதிர்ப்பைக் காட்டுவது கடமையென்றால் அதை எப்படி சனநாயக முறைப்படி செய்வது என்பதைக் கூட அறிந்திராத படுமடையரா அ.தி.மு.க. அங்கத்தவர்கள்?

தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதே சரியென்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? அது தலைவனுக்குத்தான் தலைவிக்கு அல்ல என்று சட்டத்தில் ஓட்டை தேடி சமாளிப்பதைத் தவிர வேறென்ன செய்வது?

மூன்று மாணவிகளை உயிரோடு தீ வைத்துக் கொளுத்தியபோது பஸ்ஸில் அவர்கள் இருப்பதைப் பலரும் சுட்டிக் காட்டியும் அவர்களைத் தெரிந்து தீவைத்துப் படுகொலை செய்த படுபாவிகளின் மனங்களில் எத்தகைய அகங்காரமும் ஆணவமும் திமிரும் வெறியும் தேசப்பற்றை மிஞ்சிய கட்சி வெறியாகவும் சட்டத்தை மதிக்காத குண்டர் குணமாகவும் இருந்திருக்கின்றன என்பதைப் பார்க்கையில் இவர்களுக்கு மரண தண்டனை கூட குறைந்த பட்ச தண்டனைதானென்றல்லவா தோன்றுகின்றது?

இதையும் கூட முதல்வர் கருணாநிதியவர்களின் சதியென்று ஒரு புது அறிக்கை வந்தாலும் வரலாம். அதை வழிமொழிந்து தெரிந்தோ தெரியாமலோ கயிறென்று நம்பிப் பாம்பின் வாலில் தொங்கிக் கொண்டிருக்கும் வை.கோவும் எதையாவது உளறவும் கூடும்.

நல்ல சிந்தனையாளராகவும் துணிந்த கொள்கையாளராகவும் மதிப்புக்குரிய மக்கள் தலைவராகவும் வளர்ந்து வந்துவிட்டு, கேவலம் அரசியல் களத்தில் சில ஆசனங்களுக்காக செருப்புக்குக்காலை வெட்டி விற்ற முட்டாளாகிக் கிடக்கும் அவரை சரித்திரம் ஒரு கருங்கல்லாய்க் காட்சியளித்து வந்த களிமண் கல்லாக எழுதி வைத்து விடக் கூடாதே என்பதுதான் கவலையாக இருக்கின்றது.

தமிழகம் நீண்ட இடைவெளியின் பின்பு, இப்போதுதான் தமிழர் கைக்குள் வந்திருக்கின்றது. அதனை மீண்டும் தமிழரல்லாதவர்களிடம் ஒப்படைத்துத் தமிழர்களுக்குள் தலைவர்களே இல்லை என்பது போலவும் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்பு இல்லை என்பதுபோலவும் ஒரு மாயையை வளர்த்து அதன் மூலம் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்த அன்னியர்கள் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து வருவதை உணராதவரா வை.கோ.?

நான் நம்பவில்லை. இவர் நன்கு விஷயமறிந்த ஒரு தலைவர். அனுபவசாலி. நேர்மையை நம்புகின்ற நல்ல மனிதர். ஆனால் ஐஸ் என்று அறியாது வேகமாக ஓடி சறுக்கி விழுந்த ஓட்டக்காரனாகவே அவர் இப்போது தரமிறங்கி நிற்கின்றார்.

அவரை வழுக்கி விழ வைத்த ஐஸ் அ.தி.மு.க. கொடுத்த பிச்சை தேர்தல் ஆசன சலுகையே ஆகும். அஞ்சா நெஞ்சம் கொண்ட சிங்கம் சர்க்கஸ்காரனிடம் கொஞ்சிப் பூனையான கதைதான்.

இனியாவது அவர் கதை மாற வேண்டும். அதை அவர்தான் மாற்ற வேண்டும். இந்த மரண தண்டனை அவர் சமூவிரோதிகளுக்கு வழங்கப்பட்டு நீதி காக்கப்பட்டதற்காகப் பாராட்டவும் பாதிக்கப்பட்ட சகோதரிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவும் துணிந்து எழுந்தாலே போதும், ஒரு புதிய பார்வை அவர் மீது விழும் சாத்தியமுண்டு.

மாறாக, குதிரையோடு சேர்ந்த பாவத்துக்காகக் கனைக்க முனையும் சிங்கமாக அவர் முனைந்தாலோ அதுவே அவருக்கு அரசியல் தற்கொலையாகவும் ஆகிவிடலாம்.

என்னவோ அவரது வீரத்தையும் நேர்மையையும் முன்னைய கண்ணோட்டத்துடன் பார்ப்பதே கடினமாக இருக்கின்றது. எதற்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்குள் சுப்பிரமணிய சுவாமி என்ற முகவரியில்லாத முக்கியஸ்தர் தமக்கு அட்ரஸ் வேண்டியோ என்னவோ தமிழக அரசைக் கலைக்க சிபாரிசு கூற முற்பட்டு இருக்கிறார்.

பால் திருட முனையும் பூனை அக்கம் பக்கம் பார்த்து நெருங்கினாலும் பரவாயில்லை. தனது கண்ணை மூடிக் கொண்டு எவரும் காண மாட்டார்கள் என்று பால் பானையென்று அடுப்புக்குள் குதித்துவிடாமல் இருக்க வேண்டும் என்று அந்த சுப்பிரமணிய சுவாமியை வேண்டிக் கொள்ள வேண்டியதுதான்.

மதுவருந்திக் கொண்டு மதுவெதிர்ப்பு கூட்டம் நடத்துவதும் நேர்மையின்றி நேர்வழி காட்ட விழைவதும் ஒன்றுதான்.

தமிழகமே! இனியாவது நீ கண் திறந்து இருந்து வா! உன்னை ஏமாற்ற ஏராளம் நல்ல வேட நாகங்கள் அங்கே இருக்கின்றன.

அட்டை உறிஞ்சுவதில் சுகமிருக்கலாம். ஆனால் உறிஞ்சப்படுவது உனது இரத்தம். மறந்து விடாதே! அது நல்ல இரத்தமா இல்லையா என்பதல்ல கேள்வி. அது உனது சொந்த இரத்தம். புரிந்து கொள்வாயா?

(தமிழமுதம் 19.02.2007)
posted by Unknown @ 5:49 PM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்