எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
ஈராக்கிற்குப் புதிய வயது நான்கு!
Dienstag, Oktober 30, 2007
நஞ்சுக்குப் பெயர் மாற்றினால் - அது
நலம் பயக்கும் பானமாகிவிடுமா?

உள்ளத்தில் இருப்பதை உண்மையாய் உரைத்தால்தான் அது உண்மையில் உண்மையாக இருக்க முடியும்.

சிரித்துக் கொண்டே "என் சகோதரனே! உன் நன்மைக்காக" என்று கூறிக்கொண்டு குத்துக் கத்தியுடன் நெருங்குபவனை நம்பவே முடியாது.

அன்பே தெய்வம் என்பதே எனது அடிப்படைக் கொள்கை என்று சொல்லிக் கொண்டே அயலவன் வீட்டுக்குத் தீ வைப்பவனை உண்மையான ஆத்திகன் நம்புவது மடைமையல்ல, பைத்தியக்காரத்தனம்.

குண்டுகளையும் துப்பாக்கி ரகைளையும் புதைத்து வைத்து சுதந்திர, சமாதான தானியங்களின் விளைச்சலை எதிர்பார்ப்பவன் மனிதாபிமானத்தின் உற்றவனாக மருந்துக்கும் இருக்க மாட்டான்.

தனது பிரச்சார பலத்தினால் பிடிக்காதவர்களைப் பற்றி பயமூட்டும் வதந்திகளை உண்மையாகவே மாற்றிக் காட்டி வைத்து, அடிப்படையில் தானே சகல பயங்கர செயல்களுக்கும் ஊக்கமும் உற்சாகமும் வழங்குபவனாக ஒருவன் இருந்தால் அவனால் கடைசிவரைக்கும் மனிதாபிமானத்துக்கு நிழல் கிடைக்கவே கிடைக்காது.

தனது சுயநலத்துக்காக நியாயங்களைக் காலின் கீழ் போட்டு மிதித்துக் கொண்டு, அதையே செய்யும் கெட்டவர்களையும் அணைத்துக் கொண்டு, நியாயங்களுக்காக என்று அநியாயங்களை நியாயங்களாகத் திரித்துக் கதை பரப்பி ஏமாற்று நாடகம் நடத்துபவனால் என்றைக்குமே நீதிக்கும் நியாயத்துக்கும் பாதுகாப்போ அரவணைப்போ உண்மையாகக் கிடைக்கவே கிடைக்காது.

நீங்கள் முறுவலிப்பது புரிகிறது.
குற்றக் கண்ணாடி அறைக்குள் ஒளிந்து நிற்கும் எவர்களை நான் குறிப்பிடுகின்றேன் என்பது தெரிந்துதானே சிரிக்கிறீர்கள்?
ஹஹ்ஹஹ்ஹா!

ஈராக்கில் சனநாயக விதையைத் தூவி, சுதந்திரத்தையும் மகிழ்ச்சியையும் வளமான வாழ்க்கையையும் அள்ளி வழங்கி, அங்குள்ள மக்களை மன நிறைவால் மூச்சுத் திணற வைத்த அமெரிக்க மகா புண்ணியத்தின் நான்காவது ஆண்டு நிறைவு இந்த 20ம் திகதியுடன் அடுத்த ஆண்டுப் படிக்குள் இறங்கி இருக்கின்றது. இன்னும் மோசமாக நிலைமைகள் உருமாறினாலும் மாறலாம்.

அமெரிக்காவின் நான்காண்டு சமாதான, சனநாயக அறிமுக இராணுவ நாடகத்தின் காட்சிகளாக இறைச்சிக்காக வெட்டப்படும் ஆடு, மாடுகளைப் போலவும் கோழி, வாத்துக்கள் போலவும் குத்திக் குதறப்பட்டு, சுட்டுப் பொசுக்கப்பட்டு, கற்பு பறிக்கப்பட்டு, சித்திரவதைகளுக்கு உட்பட்டு, இறுதியில் படுகொலைக்கு ஆளாகிப் புதைகுழிகளில் 655000 பேருக்கு மேல் புதைக்கப்பட்டும் சனநாயகம் அன்னநடை கூட நடக்கமுயலாமல் குண்டு வெடிக்கப் பதறி நடுங்கும் நிலைதான் வளர்ந்து கொண்டு இருக்கின்றது.

கணக்குக்குள் அடங்காமல் புதைந்தும் சிதைந்தும் எரிந்தும் அழுகியும் அழிந்தொழிந்தவை எத்தனையோ! அந்த ஏசுவுக்கும் அல்லாவுக்குமே தெரியும். அல்லாஹ:_ ஆமென்.

இது தவிர, 3200க்கும் அதிகமான அமெரிக்க இராணுவத்தினரும் இன்னும் இதர நாட்டுத் துருப்புக்களுமாக வேறு ஒரு தொகையும் செத்து புண்ணியம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

அந்த நாட்டின் அத்தனை தலைவர்களும் பொது மக்களும் தினம் தினம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சமத்துவமாக உயிருக்குப் பயந்து நடுங்கிப் பதுங்கிப் பதுங்கியே உயிர் வாழும் சர்வ சமத்துவம் நிரம்பி வழிகின்றது. பயமூட்டும் புதிய சனநாயகமே அறிமுகமாகி வருகின்றது அங்கே.

சனநாயகத்தை அங்கே கொட்டப் போன உலக மகா மாவீரர்களும் அவர்களுக்கு வால் பிடித்த தொற்றிகளும் அந்நாட்டு மக்களுக்கே தெரியாமல் படு இரகசியமாக வந்திறங்கி விட்டு, எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுக்களுடன் புறப்பட்ட பின் தொலைக்காட்சிகளில் அவர்களின் வீரக்களை மிளிரும் காட்சிகள் வந்து மக்களை வியப்பிலாழ்த்திக் கொண்டு இருக்கின்றன.

இந்தக் கேவலத்துக்குள்தான் எங்கோ ஓர் மூலையில் சனநாயகத்தாய் ஒளிந்து{mosimage} கொண்டு, பதுங்கிக் கொண்டு, வெளிவர முயற்சிக்கிறாளாம். ஒன்று மட்டும் தெரிகின்றது. இப்படியே போனால் அங்கே சனநாயக தாய் என்று கூறிக் கொண்டு ஒரு சனநாயக விபச்சாரிதான் வந்து நிற்பாள்.

ஒரு கொடிய சர்வாதிகாரியின் சிறந்த ஆட்சி இந்த ஏமாற்று சனநாயகத்துக்கு எவ்வளவோ மேல் என்பதுடன் அவனின் ஆட்சியைக் குறை கூறி அவனையே அழித்தவர்களுக்கு அவனது திறமையில் பத்தில் ஒரு பங்கு கூட என்பதுமே இப்போது வெட்ட வெளிச்சமாகி வருகின்றன.

ஒரு கள்வர் அமைத்த போலீஸ் கூடம் போல அங்கே ஆட்சியில் ஒரே ஊழலும் பலவீனமும் கால் நக்கலுமாக மலிந்து, உலகமே சிரித்துத் துப்பிக் கொண்டு இருக்கின்றது.

மக்களுக்கு வாக்குச் சீட்டு மட்டுமே கிடைத்திருக்கின்ற ஒரே பலன். மற்றப்படி வாழ்க்கையும் பாதுகாப்பும் வருமானமும் சுதந்திரமும் சகல உரிமைகளும் சமாதியாகி விட்டமையே உண்மையான நிலையாகி வருகின்றன.

அங்கே முள்ளை விதைத்து நெல்லை விழைந்த புஷ் மாமா உலக மகா புகழ் பெற்ற கொடும்பாவியாக உலக நாடுகளில் எங்கணும் எரிக்கப்பட்டும் மிதிக்கப்பட்டும் வையப்பட்டும் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்.

தனது தேசத்திலேயே அவரது புகழ் புதைகுழிக்குள் இறங்கிக் கொண்டு வருகின்றது.

பொய்யும் ஏமாற்றும் சுயநலமும் தந்திரமும் பணத்திமிரும் ஆயுத வெறியும் கொஞ்சக் காலத்துக்குத்தான் என்பதும் படர்ந்து எரிகையில் நெருப்பு பெரிதாக இருந்தாலும் அதுவே அதன் நிரந்தர முடிவாக மற்றவற்றைச் சாம்பலாக்கித் தன்னில் புகையாகி மறைந்தொழியும் என்பதும் உறுதியாகி வருகின்றன.

உலக அமைதிக்காக என்று கூறிக் கொண்டு உலக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் ஆயுத பல அணுகுமுறையில் அதீத நம்பிக்கை வைத்து விளையாடும் வல்லரசுக்களுக்கு வெற்றி நிரந்தரமல்ல என்பதும் அறிவில்லா பலமே அநீதியை நாடும் அறிவுள்ள பலமோ நீதியைத் தேடும் என்பதும் இனியாவது பாடமாகப் புரிந்தால்தான் நல்லது.

நீதியைப் பேசி வெல்லத் துணிவில்லாத அநீதியாளர்களே இந்த "பயங்கரவாத" முத்திரையைக் குத்திவிட்டு, அழித்து அடிமைப்படுத்திவிட முயலும் கலையைக் கையாள்கின்றார்கள்.

ஆனால் எங்கே நீதி உண்மையாக இருக்கின்றதோ, எங்கே சத்தியம் அத்திவாரமிட்டு இருக்கின்றதோ, அங்கேதான் துணிவும் திறனும் திட்டமிடலும் சரியாக நின்று வழி காட்டி வழி நடத்தும் என்பதே வரலாறு.

ஈராக்கில் அமெரிக்கா செய்த பாவம் அதன் நான்காண்டு நிறைவில் இன்று அதன் மீதான உலக நம்பிக்கைக்கே வேட்டு வைத்து விட்டிருக்கின்றது. பாவம்!

என்றைக்கு ஈராக்கில் தலைவர்கள் பயமின்றி பொது இடங்களில் நடமாடுவார்களோ, என்றைக்குத்தான் ஆக்கிரமிப்புப் படைகளுக்குத் தங்களுக்கு சனநாயக சந்தோஷத்தை அள்ளி வழங்கிமைக்காக அந்நாட்டு மக்கள் பூச்சொரிந்து நன்றி சொல்வார்களோ, அன்றிலிருந்துதான் மத்திய கிழக்கில் வல்லரசுக்களால் நம்பிக்கை பெறுவதில் பத்து வீதமாவது சரிவரும்.

அதுசரி…ஏனிந்த மேற்குலக சனநாயகத்தை அந்த சனங்கள் ஏற்ப மறுக்கிறார்களாம்?

அம்மண சுதந்திரமும் மதுசுதிச் சுதந்திரமும் நல்ல ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இஸ்லாமிய ஒழுக்கத்துக்கு ஒத்துவரா என்றுதானோ?

பசியும் வறுமையும் இதயசுத்தியான இறைபக்தியும் எளிமையான வாழ்க்கை முறையும் பசியையே அறியாத பணக்காரர்களுக்கும் ஆடம்பரம் அவசியமென நினைக்கும் மேல் தளத்தினர்க்கும் பேச்சில்தான் தெரியுமே தவிர, உணர்வில் புரியாது .

பிரஞ்சுப் புரட்சி வெடிக்கு முன்பு மக்கள் பசியால் வாடித் துடித்து ஆர்ப்பாட்டம் செய்கையில் அந்நாட்டின் அரசி ஆணவமாகச் சொன்னாளாம் "வெதுப்பு ரொட்டி (பாண்) கிடைக்காவிட்டால் கேக் சாப்பிடுவதுதானே!" என்று.

இந்த பணக்கார முதலைகளின் கபட நாடகத்தின் மேடையாக சனநாயகம் இருக்கும் வரைக்கும் உலகம் உய்வடைவது வெறும் கனவுதான்.

நான்கு வருடங்கள் கடந்து ஐந்தாவது ஆண்டு துவங்குகையில் அங்கே சவப் பெட்டிக் கடைக்காரர்களுக்குத்தான் முன்னேற்றம் இருக்கும் என்றால் இதற்கு என்ன பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும்?

சனநாயகம்? பிணநாயகம்?

சனநாயக முறைப்படி புள்ளடி போட விட்டுப் பார்ப்போமா?

மறைந்த பாடகர் ஏ.எம். ராஜா அவர்கள் "பாட்டு பாடவா பார்த்துப் பேசவா" என்ற மெட்டில் சொர்க்கத்திலிருந்து பாடுகின்றார்.
சைலென்ஸ் ப்ளீஸ்!

வாழ்த்துப் பாடவா?
பார்த்து ஏசவா?
யாரை அங்கு யார்..
அழைத்துச் செல்வதாம்?
மக்களாட்சி தோன்றுமென்று
சொன்ன கள்ளரால் - இன்று
நாடு பற்றி எரிகிறதே காக்கப் போவதார்?

(தமிழமுதம் 27.03.2007)
posted by Unknown @ 5:52 PM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்