எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
எழுத்துரிமையைத் தடுத்தாட எவருக்கும் உரிமை இல்லை
Montag, Juli 14, 2008
சிற்பத்தில் பிழை தெரிந்தால் சிற்பத்தைத் திருத்தலாம். ஓவியத்தில் குறை தெரிந்தால் ஓவியத்தைத் திருத்தலாம்.
ஆனால் சிற்பத்தின் குறையை அதை இடித்துத் தகர்த்துத் திருத்துவதெப்படி? ஓவியத்தின் குறையை அதை அழித்து விடலால் நிவர்த்திப்பது எப்படி?

புலம் பெயர்ந்து> கடல் கடந்து வந்தபின் அகிலத்தின் நாற்றிசைகளிலும் பரவி நிற்கும் தமிழ்ச் சமூகத்தின் சமுதாய நோக்கும் இலக்கிய வாஞ்சையும் விதைத்து> வளர்த்து> படிப்படியாக வளர்ந்து> உயர்ந்து கொண்டிருக்கின்ற எழுத்துலக இலக்கிய கலை வட்டத்துக்குள் புதிதாகச் சில துயரந்தரத்தக்க செய்திகள் பரவி வருவதாக அறியக் கிடைக்கின்றது.

ஆங்காங்கே காளான்களாய் முளைத்துவிட்ட சில எழுத்துலக மேதைகளும் கருத்துணராக் கவிஞர்களாய் வலம் வருகின்ற கற்பனை பூச்சியங்களும் அறிவீனமே கொடியென ஏந்தி நிற்கும் அறிவுக்குறைத் தும்மல்களுமாக இலக்கியக் களத்தைக் களங்கப்படுத்துவதில் தங்களுக்கு ஏற்றம் காண விழைவதாகத் தெரிவதாக செய்திகள் வருகின்றன.

எழுத்தாளர்களின் சதந்திரத்துக்கு எதpராகச் சிலர் அச்சுறுத்தி வருவதாகவும் தெரிகின்றது. இதன் சரியான உண்மை என்னவோ! ஆனால் எந்த ஒரு படைப்பாளியையும் எவரும் தன்னிச்சையாக அடக்கி வைக்க முனைவது பெரிதும் கண்டிக்கத்தக்கதே! எதிர்க்கத்தக்கதே! முற்றாக வெறுக்கத்தக்கதே!

அழகான தாமரைக் குளமாக வளர்ந்து வரும் புலம் பெயர் இலக்கிய வட்டத்துக்குள்ளே ஆங்காங்கே சேறும் சகதியும் கழிவுகளும் கொட்டப்பட்டு அது படிப்படியாகக் கறைப்படுத்தப்பட வழி எழுவதாக எழுந்துவரும் ஒரு புதிய சூழ்நிலை காரணமாக௪.

தற்போது எழுத்துலகிற்குள் அடிவைத்து நுழைய விழைகின்ற புதிய இதயங்களுக்கு பயத்தையும் வளர விழைகின்ற புதுமலர்களுக்கு அதிhச்சியையும் கொடுத்து> புதிய அறிமுகங்களின் வெற்றிக்குத் தடை விதித்து> அதன் மூலம் தற்போது இருக்கும் சில சுயநலச் செடிகள் தாங்கள்தான் மரங்களென எழுந்து நின்றுவிடப் பகீரதப் பிரயத்தனம் எடுத்துவருவதாகr; செய்தி வருகின்றது.

உற்சாகமூட்டி> அறிவுரை வழங்கி> வழிநடத்தி> இந்த அற்புதமான பூங்காவைக் கட்டிக் காப்பதற்குப் பதிலாக அதிகார அணுகுமுறை போன்ற ஓர் அவசியமற்ற பாதையிலே சிலர் சென்று இதனை வெறும் புதர்களின் காடாக்கி விடவும் அதன் மூலம் தாங்களே உயர்வு என அழுத்திக் கொள்ள முயல்வதுமாக jPik gaf;Fk; முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதிர்ச்சிதரும் செய்திகள் பரவலாகிக் கொண்டு வருவதாகத் தெரிகின்றது.

எழுத்தாளுமை என்கின்ற மல்லிகையில் வாசம் வீசும் மல்லிகையென்றும் நாற்றம் வீசும் மல்லிகை என்றும் காட்ட விழைகின்ற முயற்சி இருக்கிறதே! அது அசாதாரணமானது. அசாத்தியமானது. அதிசயமானது. அவசியமே அற்றது.

இந்தப் படைப்பு மல்லிகையில் ஆளுமை உண்டா இல்லையா என்பதைப் பொறுத்தே அது உண்மையான இயற்கையான மல்லிகையா அல்லது அழகு கொழிக்க செய்யப்பட்ட செயற்கை மல்லிகையா என்பதை உணர முடியும்.

மல்லிகை இயற்கையானதென்றால் அதில் மணம் இயற்கையாகவே வீசும். அப்படியன்றி மற்றதென்றால் வாசனைத் திரவியத்தைச் சேர்த்தே அதைச் செய்தாக வேண்டும்.

எழுத்தாளன் என்பவன் மற்றவர்களின் ஏற்றத்துக்காக நினைப்பவன். அதற்காக உழைப்பவன். படைப்பவன். வெறும் பெருமைக்காகவும் புகழுக்காகவும் குழைபவனல்லd;. ஏனெனில் அவன் சுதந்திரமானவன்.

அவனிடம்......
நேர்மையும் உண்மையும்
ஒழுக்கமும் கண்ணியமும்
இதய சுத்தியும் சிந்தனை இருளின்மையும்
தைரியமும் அஞ்சாமையும்
பழிக்காமையும் இழிமை செய்யாமையும்
துர்க்கருத்துக்களைத் தெரிந்தே பரப்ப மறுப்பமையும்
அன்பையே முன்வைத்து இதயத்தை ஈர்ப்பமையும்
பகையைத் தூண்டிப் பிரிவேற்படுத்தாத நற்பண்பும்
அடுத்தவர் உயர்ச்சியே அக்கறையாய் இருப்பதுவும்
அனைத்திற்கும் மேலாக ௪.
சத்தியத்தின் பால் சுத்தமான நம்பிக்கையும் வேட்கையும்
எழுத்தும் எண்ணமும் ஒன்றான ஒழுக்கமும்
நிச்சயமாக இருந்தே ஆகவேண்டும்.

அப்படி இருந்தால்தான் அவனால் வழியைக் காட்டும் தகுதியையும் சரியைக் காட்டும் உறுதியையும் இறுதி வரை கடைப்பிடித்து இந்த எழுத்துப் பணியில் நிலைத்திருக்க முடியும்.

இதய சுத்தமற்றவர்கள் பரிசுத்தவான்கள் போல நடிப்பவர்களாக மட்டுமே இருப்பார்கள். அவர்கள் அப்பாவிகளையும் ஏமாளிகளையும் கோமாளிகளையும் நம்பித் தங்களின் வண்டியை ஓட்டுபவர்களாகவே இருப்பார்கள்.

இவர்களின் பேச்சில் இனிப்பிருக்கும். ஆனால் அதில் இனித்தே கொன்றுவிடும் நஞ்சுதான் நிறைந்திருக்கும். இவர்களின் இதயங்களில் அடுத்தவர் உயர்வுக்கான ஆர்வமோ அக்கறையோ இருக்கவே இருக்காது. ஆனால் அவைதான் தங்களிடம் நிறையவே இருப்பதாக அவர்கள் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

இவர்களை அடையாளம் காண> இவர்களின் நடத்தைகளை ஆழமாக அவதானித்து வர வேண்டும். மக்களுக்காகவே வாழ்கிறேன் என்று கூறிக் கொண்டு மக்களாலேயே வளர்ந்து கொண்டு மக்களை அடக்கி வைத்தே உயர்ந்து வரும் அரசியல்வாதிகளும் இவர்களும் அண்ணன் தம்பியர் என்பதும் பலவிதங்களில் இரட்டையர்களை ஒப்பவர் என்பதும் அனுபவம் மட்டுமே உணர்த்தத்தக்க பாடம்.

இதை உணராமல் அவர்களிடம் விளக்கம் கேட்டால் அப்படி உணர முயல்வதையோ உணரத் தூண்டுவதையோ கூட பாவமென்றும் துரோகம் என்றும் விளங்க வைத்து ஏமாற்றி விடுவார்கள்.

ஆனால் எப்போதும் மேலேயே தங்களை வைத்துக் கொள்ளும் கலையை மட்டும் அக்கறையோடே கைக் கொள்ளும் இவர்களைக் கீழே நின்று இயங்கி வரும்படி சற்று வழி செய்து பாருங்கள். ஒளிக் கீற்றுக்கு அஞ்சி ஒளிந்தோடும் இருளைப் போல இல்லாமலே ஓடி மறைவார்கள்.

பொய்மையின் பேய்மைச் சக்தி இவ்வளவுதான்.

எல்லாச் சுதந்திரத்துக்கும் அடிப்படையான முதற் சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டுச் Rதந்திரம்தான். அதை யார் எங்கே எப்படி எப்போது மறித்தாலும் மறுத்தாலும் அது அதர்மம்தான். மனிதாபிமான விரோதம்தான். அதனை ஒட்டியை ஒட்டி மாற்றிவிட இயலவே இயலாது.

தாய் மண்ணில் உண்மை சொன்ன ஊடகவியலாளர்களை ஊமையாக்க ஆயுதம் பயன்படுத்தப்பட்ட கொடுமை எத்துணை கொடுமையானதோ ஆபத்தானதோ அதற்கு ஏற்ப ஒரு கொடிய கொடுமைதான் புலம் பெயர்ந்து வாழ் எழுத்தாளர்களின் வாயையும் விரல்களையும் சுதந்திரமிழக்கும்படி அச்சுறுத்துவதுமாகும் என்பதை எழுத்தாளர்களும் எழுத்தார்வலர்களும் மறந்துவிடல் ஆகாது.

சுதந்திர வேட்கை நிறைந்திருக்கும் எழுத்தாளர்கள் தவறான பொறிகளுக்குள் விழுநது விடாமல் தடுப்பதற்கு முக்கியமான கவனிக்க வேண்டிய வழி என்னவென்றால் அதன் தாற்பரியத்தை அவர்களுக்குத் தெளிவாக உணர்த்துவதுதான்.

ஒரு பழக்கம் தீயதென்றால் அதைத் தீயதென்று அறிவுரைக்க வருபவன் அத்தீயதைக் கடைப்பிடிக்காதவனாகவும் அதற்கு இதய பூர்வமான உண்மையான எதிர்ப்பாளனாகவும் உண்மையாகவே வாழ்பவனாக இருக்க வேண்டும். வெறுமனே ஆலமரத்தில் தொற்றிக் கொண்டு தானும் ஆலமே என்று கூவிடும் செடி கொடியாக இருந்தால் அது எவர்க்கும் என்றைக்கும் நடைமுறைச் சாத்தியமே அல்ல.

இந்தப் புதிய புலம்பெயர் இலக்க வட்டத்தின் டெங்குக் காய்ச்சலினால் பல புதிய மற்றும் ஆர்வமிக்க எழுத்தார்களின் எழுத்தார்வத்துக்கு ஆப்பு வைக்கப்பட்டு விடும் ஆபத்தும் தெரிவதே அதிர்ச்சியை அளிக்கின்றது.

சுதந்திர வேள்வியின் தியாகத் தீபங்களுடன் புலம்பெயர் மண்ணின் சில பட்டாசுக்களைச் சமமாக ஒப்பிடுமளவிற்கு அறிவில் தரம் தாழ்ந்த எழுத்தாளர்கள் நமக்குள் இல்லை என்பதை இலக்கிய வட்டம் நன்றாக அறியும். அதற்குப் போலிகளின் பார்வை மந்தமானது என்றும் கால சக்தியில் அடிபட்டுப் போய்விடும் சருகொப்பதென்பதும் மிகமிக நன்றாகவே தெரியும்.

ஆனால் வீண் பழிகளும் பட்டங்களும் சூட்டப்பட்டு விடுமோ என்கின்ற நியாயமான பயமே பலரையும் தயக்கத்துடன் யோசிக்க வைத்து வருவதும் புரிகின்றது.

உருக்கு நெருப்புக்கு அஞ்சலாம். தங்கம் அஞ்சத் தேவையில்லை. இதய சுத்தியுடனிருந்தால் எந்த ஊடகமும் வானொலியும் உண்மை எழுத்தாளரை விலைக்கு வாங்கிவிட முடியாது.

அதற்கு மாறாக எதிரியின் பாசறைக்குள்ளும் சென்று அவனது இதயத்தையே மாற்றி விடும் ஆற்றலும் மனவுறுதியும் கொள்கை உறுதியும் இருந்தால் பீரங்கி கூட பிரம்பாகிவிடும். இதனை சரியாக உணராத சந்தர்ப்பவாத வெற்றி தேடிகளின் வாய்ச்சவடால்களுக்குப் பயந்து நீதியையும் நேர்மையையும் கைவிட்டுவிட்டு எழுத்தாளர்கள் ஒதுங்க முனைந்தால் ஆட்டுப்பட்டிக்குள் ஒநாய்களை வளர விட்ட கதையாகவே நாளைக்கு இந்த புலம்பெயர் இலக்கிய வட்டம் ஆகிவிடும். ஜாக்கிரதை!

தமிழீழ மக்களின் தனித்துவமான போராட்டத்தை இங்கிருக்கும் எவராவது தத்தமது சொந்த வளர்ச்சிகளுக்கான கருவியாகத் தந்திரமாகப் பாவிக்க முயல்வது தெளிவாகத் தெரிந்தால் எழுத்தாளர்கள் அதனை முன் வந்து வெளிப்படுத்தி வெற்றி காண முயலவேண்டும். மாறாக கைகட்டி நின்று விடக் கூடாது.

காரணம் சீனியில்லா ஊராக இவ்வட்டத்தை மாற்றித் தம்மைச் சீனியாக உயர்த்திக் காட்டிவிட முயலும் சதிகார எண்ணம் கொண்ட இலுப்பைப் பூக்கள் நம்மிடையே இருக்கின்றமை நிச்சயமாக ஒரு பரகசியமே!

சத்தியத்தைச் சொல்லுகின்ற உத்தமர்கள் கைகளில்
நித்தியமும் எழுதுகோல் கருவியாக வேண்டும்
சத்தியத்தை விற்று அதில் உயர்வு தேடும் பொய்மையை
எத்திசையும் நின்று சாட வேண்டும்

அச்சமதை ஊட்டுவதால் ஆர்வமதைத் தடுத் ததில்
உச்சம் தேடும் தவறு தவிர்க்க வேண்டும்
அச்சாணி உறுதியுடன் மலைகடக்கும் வண்டியாய்
எழுத்தாளர் பணிகள் ஆக வேண்டும்.

பாதகம் செய்பவரைக் கண்டால் -நீ
பயந்துவிடல் ஆகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா ௲ அவர்
அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
என்று முழங்கினான் சுதந்திரக் கவி பாரதி.

நாம் மூன்றாம் வரியிலிருந்து மாற்றி

மீறி நிமிர்ந்துவிடு பாப்பா ௲ எங்கும்
துணிந்து பணியைத் தொடர் பாப்பா

என்று பாடினால்தான் நல்லது.
சத்தியம் இருந்தாலே அது சாத்தியமாகும்.

புலம் பெயர்ந்த இலக்கியப் பூங்காவினுள்
பலம் நிறைந்த மனங்கள் வந்து வளம் சேர்க்கட்டும்!


தமிழமுதம்

Monday, 06 December 2004
posted by Unknown @ 9:11 PM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்