எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
பாம்புகளே! வெறி கொண்டலையும் ஓநாய்களே! சுனாமி அனர்த்தமும் கூட உங்களிடமிருந்து தப்பமுடியாதா?
Montag, Juli 28, 2008
பாம்புகளே! வெறி கொண்டலையும் ஓநாய்களே! சுனாமி அனர்த்தமும் கூட உங்களிடமிருந்து தப்பமுடியாதா?



(2004ம் ஆண்டு இறுதியில் ஆசியாவையே அழித்து அதிர்ச்சிக்குள்ளக்கி விட்டு நின்ற கொடிய சுனாமியை அடுத்து நடந்த அரசியல் பயங்கரங்களை நினைத்து வடித்த கண்ணீர்க் கட்டுரை இது)



இலட்சக் கணக்கில் உயிர்களைப் பறித்தும் உடைமைகளை அழித்தும் ஊழிக்கால அட்டகாசத்தை நடத்தி விட்டு இன்னமும் அச்சுறுத்திக் கொண்டேயிருக்கின்ற சுனாமிப் பேரனர்த்தத்தின் கதைகள் அவலங்களுடன் அசிங்கங்களாக ஒவ்வொன்றாக படிப்படியாக வெளிவந்து கொண்டு இருக்கின்றன.
இந்த அனர்த்தம் பற்றிய எச்சரிக்கையை முன்னறிந்திருந்தும் வேண்டுமென்றே சில பொறுப்பு வாய்ந்தவர்களால் அசட்டை செய்யப்பட்டமை இந்த அழிவினைப் பேரழிவாக்கிவிட ஒரு காரணம் என்றும் கருத்துக்கள் பரவத் தொடங்கி வருகின்றன.

அரசியலில் அநாகரீகமாக நடந்து கொள்ளும் அதர்மர்களும் சந்தர்ப்பவாதிகளும் இந்தப் பாரிய அனர்த்தத்தை ஒரு கவசமாக அணிந்து கொண்டு தங்களின் வஞ்சகங்களையும் தந்திரங்களையும் சதிகளையும் கழுத்தறுப்புக்களையும் கட்டவிழ்த்து விடத் தொடங்கியுள்ளார்கள் போலவும் மனதை நோக வைக்கத்தக்க செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்களின் பரிதாப நிலையையும் தடுமாற்றங்களையும் எதிர்காலம் பற்றிய சூனிய நிலைமையையும் பயன் படுத்திக் கொண்டு அந்த பலவீனங்களில் பல தீய சக்திகள் சுயலாபம் தேடிடும் கதைகளும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

நம்பவே முடியாத கொடூரமான செய்திகள் அவை.

இறந்து கிடந்த பிணங்களின் உடலுறுப்புக்களை அறுத்து அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களைக் கொள்ளையடித்திருக்கின்றது ஒரு கூட்டம்.

அகதி முகாம்களிலும் அநாதரவாகவும் இருந்து தவித்த இளம் பெண்களும் தாய்மார்களும்கூட பல காமுகக் கழுகுகளால் பாலியல் வனமுறைக்கும் கும்பல் பாலியல் வன்முறைக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அகதிகளுக்காகவென்று அனுப்பப்பட்ட பல நிவாரணப் பொருட்களும் பெருமளவிற்கு பலாத்காரமாகக் காடையர்களினாலும் அவர்களுடன் ஒத்துழைத்து ஒத்தாசை புரிந்த நகர்க் காலர்களினாலும் படையினரினாலும் பலாத்காரமாகப் பறித்தெடுக்கப்பட்டு லொறி லொறியாகக் கடத்தப்பட்டுள்ளனவாம். கடத்தப்படுகின்றனவாம்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் இனரீதியாக ஓரங்கட்டப்பட்டு அவர்களுக்கான உதவிப் பொருட்கள் பாதிக்கவே படாத பிற இன மக்களுக்கு இனவாத இராணுவ மற்றும் அரச அதிகாரிகளினால் பகிர்ந்தளிக்கப்படுகின்றனவாம்.

கேவலத்திலும் கேவலமாகப் பச்சைக் குழந்தைளையும் இளம் பெண்களையும் கடத்திக் காமவெறிப் பணிக்கென விற்றுப் பணம் தேடிக் கொண்டிருக்கின்றனவாம் சில பிசாசுக் கும்பல்கள்.

உலக நாடுகள் அள்ளி வழங்கும் உதவிகளை இனவெறி பிடித்தவர்களின் ஆட்சியிலிருக்கும் நாடுகள் அப்படியே துர்ப்பிரயோகம் செய்து தங்களின் அரச படைபலத்துக்கான அத்திவாரங்களுக்கு அடிப்படை வேலைகளைச் செய்து வருவதாகவும் சந்தேகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

எதிரியின் ஒழுங்குகளைச் சிதைப்பதே அரசியல் வெற்றியின் தந்திரம் என்பதைப்போல அரசியல் நரிகள் அன்னிய நாட்டு ஆயுதப் படைகளை உள்ளிழுத்து உதவி கேட்டு படிப்படியாக அதனை வைத்தே மக்களெழுச்சியை அடக்கி வைத்திட மிகவும் சாதுர்யமாக மிலேச்சத்தனத்தை மனிதாபிமான உருவில் அமுல்படுத்திட முயன்று கொண்டு வருகின்றார்களாம்.

மனிதாபிமானப் பணிகளிலும் தங்களின் எதிரிகளுக்கு நற்பெயர் வந்துவிடக் கூடாது என்று ஆழ்ந்து சிந்தித்து அநியாயத்தை நடைமுறைப்படுத்தும் நாகங்களும் நரிகளும் பூரான்களும் பல்லிகளுமாக கடலுண்ட கரைகளிலெல்லாம் புதிய அராஜக நோயொன்று வெடித்துப் பரவிவிடுமோவென்ற நியாயமான அச்சம் மனிதாபிமானிகளின் இடையிலே பரவி வரத் தொடங்கியள்ளதாம்.

ஆனால் இந்த சுனாமியால் சூறையாடிவிட முடிந்ததெல்லாம் உயிர்களையும் உடைமைகளையும்தான். ஆனால் அவற்றுக்கெல்லாம் மேம்பட்ட ஒன்றை மட்டும் அதனால் சூறையாடவே முடியவில்லை. முடியவும் போவதில்லை.

அதுதான் மக்களின் அடிப்படை உரிமைக்கான சுதந்திர உணர்வு.

அந்த உயரிய இலட்சிய உணர்வின் மீதுதான் இப்போது ஆயுதமில்லாத அதிகார அடக்குமுறை இனவெறி அரசியல்வாதிகளினால் நடைமுறை ஏற்பாடுகள் என்ற மூடுதுணியுடன் ஏவிவிடப்படத் தொடங்கியுள்ளதாம்.

உண்மையான நண்பனை ஆபத்து சூழ்கின்ற வேளையிலேயே சரியாய் அறிய முடியும் என்று சொல்வதுண்டு. அன்னிய ஐயாமார்களும் அனர்த்து உதவி நல்ணெ;ணக்காரர்களும் இனிவரும் நாட்களில் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறத்தே இந்த சுனாமியின் அனர்த்தத்தை எவர் எவ்வாறு சரியாக அர்த்தப்படுத்தி நிற்கின்றார்கள் தெரியவரும்.

அப்பாவி மக்களை அழித்தாவது மனிதாபிமானத்தை உணர வைக்கப் பார்ப்போம் என்று அந்த இறைவன் நினைத்து இந்த அனர்த்தத்தை அனுப்பி இருந்திருந்தால் இன்றைய மீட்புப் பணிச் சூழ்நிலையில் இந்த மனித விரோத மனித விலங்குகளின் வாலாட்டங்களினால் நிச்சயமாக நிலைகுலைந்தே போவான்.

ஆனால் ஆன்றோர்கள் எற்கனவே சொல்லியிருக்கின்றார்கள். சில நல்ல நம்பிக்கைக்குரிய விடயங்களை.

இதோ இவற்றில் சில:

காரணமில்லாமல் காரியமில்லை.
சம்பவங்களெல்லாம் முடிவுகளல்ல.
நடப்பவை எல்லாம் நன்மைக்கே!
நாமொன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும்
கடமையை நீ செய். தீர்ப்பை அவனிடம் விட்டுவிடு

காலதேவனின் கருத்து நீதியைக் காக்குமென்பதுதான் அன்றுமுதல் ஆன்றோர் நம்பிக்கையாக இருந்து வந்தது. அதனால் இதயத்துக்குள் நம்பிக்கை வருகின்றது.

"நம்பிக்கையே! தயவு செய்து நீ அப்படியே இருந்து கொள்“ என்று வேண்டிக் கொள்வோம்.

அதுசரி… நல்லவற்றை அனுபத்தில் கண்டு சொன்ன ஆன்றோர்களைப் போல இன்றைக்கு யாரிருக்கிறார்கள்?

மூச்! அவர்களின் சகாப்தம் முடிந்துவிட்டது.

இப்போது அவர்களின் வேடத்திலிருப்பவர்கள் மட்டுமே இருக்கின்றார்கள்.

யாரவர்கள்?

பூசணிக்காயைப் பார்க்க பூதக் கண்ணாடியைக் கேட்கிறீர்களே!


தமிழமுதம்
Thursday, 06 January 2005
posted by Unknown @ 8:07 PM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்