எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
பகுத்தறிவில் சிக்கி நிதம் பாடுபடும் பராபரமே!
Montag, Juli 14, 2008
மனிதனின் அறிவு தெளிவு பெறத் தொடங்கிய காலத்தில் அவனுக்கிருந்த பெரும் பிரச்சினைகளில் தலையாயதாக இருந்தது பயம் என்கின்ற உணர்வுதான் என்பதை நாம் அறிவோம்.

அந்த உணர்வுதான் அவனைத் துணை தேடும் அவசியத்துக்குள் தள்ளிச் சிந்திக்க வைத்தது எனலாம். அதனால்தான் அவன் தனது தனிமையைத் தவிர்த்துக் கொள்ளவும் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளவும் இணைந்து வாழும் கலையைக் கடைப்பிடிக்கத் தொடங்கினான்.

ஆனால் அவனால் அதிலும் பாதுகாப்புக்கு உறுதி கிடைக்கவில்லையென்பது போகப் போகத்தான் அவனுக்குப் புலனாகத் தொடங்கியது.

போட்டிகளும் பொறாமைகளும் பகைமைகளும் இன்னோரன்ன இதர எதிர் உணர்வுகளின் தாக்கங்களும் அவனது மனதை மிகவும் கடுமையாகவும் ஆழமாகவும் பாதிதது வந்தன. அதனால்தான் தான் காணும் அனுபவத்துக்கும் மேலாக இன்னும் ஓர் அனுபவம் இருப்பதைப் பற்றி அவன் எண்ணத் துவங்கினான்.

இங்கேதான் அவனுக்குத் தான் நம்பிக்கை வைத்துப் பின் தொடர ஓர் உறுதியான புதிய தொடர்பு தேவைப்பட்டது. இந்தச் சிந்தனையின் ஆழமான வளர்ச்சிதான் அவனைத் தனது தோற்றத்தின் ஆய்வினையும் தனது சூழலின் ஆய்வினையும் ஆழமாகச் செய்து வரச் செய்தது.

அதனால் அவனது பயத்துக்கான காரணங்களை அவன் அறியவும் உணரவும் முற்பட்டான். அவனது அறிவு வளர வளர அவனுக்குள் எழத் தொடங்கிய அசைக்க முடியாத நம்பிக்கைதான்...

தான் தானாக இயங்கும் சக்தியல்லவென்றும் தன்னை இயக்குகின்ற ஒரு சக்தியினால் இயக்கப்படும் கருவி மட்டுமே என்றும் அவனை உணர்ந்து கொள்ள வைத்தது.

இந்த சக்தியை அவனது சிந்தனையின் வட்டமானது அவனையொப்ப ஒரு மானுட உருவத்துடன் உருவகப்படுத்தியமைதான் இறைவனை மனித உருவமாகத் தேடுகின்ற மாiaயை வளர்த்து விட்டது எனலாம்.

மனிதனின் இவ்விதமான சிந்தனையை விலங்குகளும் கொண்டிருந்தால் அவை அச்சக்தியை அவற்றை ஒப்ப விலங்குருவாகவே நினைத்திருக்கும்.

ஆனால் இந்த நம்பிக்கை அவனுள்ளத்திலிருந்து எழுந்ததற்கும் ஓர் அடிப்படைக் காரணமாக அந்த சக்தியே இருந்திருக்க வேண்டும்.
ஏனெனில் இந்த நம்பிக்கை அவனுக்குள் மிகத் தீவிரமாக வளர்ந்த பின்புதான் மனிதன் தன்னம்பிக்கை கொண்டவனாக தைரியமாகத் துணிவுடன் இயங்கத் தொடங்கினான்.

அதனால்தான் தான் கடைப்பிடித்து வந்து கொண்டிருந்த வழிகளில் இருந்த சரியையும் பிழையையும் பகுத்தறிந்து கடைப்பிடிக்கும் தகைமை அவனுக்கு வந்தது.

ஏனெனில் தான் நம்பிய சக்தியின் கோபம்> தான் தவறிழைத்தால் தனக்கு எதிராக எழுந்து விடுமோ என்கின்ற புதிய அச்சம் அவனை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது.

இது அவனது சக்தியோ பலவீனமோ மூடத்தனமோ அறிவுடைமையோ> அவனது போக்கை ஒரு கட்டுப்பாட்டுக்குள் தள்ளி ஒழுக்கங்களின் அத்திவாரத்துக்குள் அழுத்தி> அவனை வழிப்படுத்த உதவியது என்பது மட்டும் உறுதியான வாழ்க்கை மாற்றமாக அவனுக்கு அமைந்தது.

அதன் பெருமளவு பங்கு இந்த சக்தியின் மேலெழுந்த அதாவது அவன் நம்பத் தொடங்கிய இறைவனின் மேலெழுந்த தீவிரமான நம்பிக்கைiaயே rhUம்.

அதே சமயம் காலகெதியில் மனித வரலாறுகள் விரிவுபட> விரிவுபட இந்த நம்பிக்கையை அவன் வழியில் ஆழ்ந்து கடைப்பிடித்து உணர முற்பட்ட பின்னைய சந்ததியவர்கள் ஓர் அடிப்படை உண்மையை உணர்ந்தார்கள்.

அதுதான் நம்பினார் கெடுவதில்லை என்ற அனுபவ செய்தி. இது சும்மா ஏமாற்றுக்காரர்களின் குரல் வெளிப்பாடாக இல்லாமல் சத்தியவாதிகளின் அதாவது தன்னலமற்ற பொதுநலவாதிகளின் அனுபவ வெளிப்பாடாக அமைந்ததன் பிறகுதான் மனிதர்கள் அதுபற்றி ஆர்வம் கொள்ளவும் பின்பற்றவும் தொடங்கினார்கள்.

இதனால் சமுதாயங்கள் இதுபற்றிப் பரவலாக அறிய முற்படும் சூழ்நிலை உருவாகியது. இன்றைய மறுமலர்ச்சி இல்லாத அக்காலத்தில் இருந்த கடினங்களையும் சிரமங்களையும் ஊன்றிக் கவனித்தால் இச்செய்தியின் பரிமாற்றத்துக்காகவே கதைகளும் புராணங்களும் வழிபாடுகளும் உருவாக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.

எது எப்படியிருந்த போதிலும் இந்த நம்பிக்கையின் உண்மைத்தன்மையை மட்டும் மட்டமாகவோ குறைவாகவோ கருதி விடுதல் தவறென்பதே நேர்மையான அனுபவங்களின் வெளிப்பாடாக இருக்கின்றது.

இறைநம்பிக்கையை இகழ்வதும் பழிப்பதும் பகுத்தறிவு என்னும் எண்ணத்தின் பின்னணியின் காரணம்> அடிப்படையில் சம்பிரதாயங்களின் ஊழல்களின் தாக்கங்கs; என்பதே உண்மை.

சுயநல நோக்கிகளினால் ஊட்டி வளர்க்கப்படுகின்ற மூட நடவடிக்கைகளால் ஏற்படும் பாதிப்புக்களை எதிர்க்கையில் அது பீடித்திருக்கின்ற நோயை வெறுக்கும் ஒரு குணம் போன்றது.
ஆனால் அதற்காக இந்த நம்பிக்கையையே மறுத்து நிற்பது நோயை முன்வைத்து நோயாளியையே வெறுப்பதைப் போன்றது.

இதைச் சொல்வதற்கு காரணமிருக்கின்றது. இறை நம்பிக்கை என்பதை மிகக் குறுகிய வட்டத்துக்குள் வைத்துச் சிந்திப்பதற்கும் அதை அவற்றுக்கப்பால் வைத்துச் சிந்திப்பதற்குமிடையிலே வித்தியாசமிருக்கின்றது.

மதநம்பிக்கைகளை வெறும் சம்பிரதாயத் தொற்றலாக மட்டும் கடைப்பிடிக்கும் மனிதர்களுக்கு மத நம்பிக்கையின் நோக்கம் தெளிவாகப் புரிந்திருப்பதில்லை. அதனால் அவர்கள் சம்பிரதாயச் சடங்குகளின் மூலமாகக் கடவுளைத் தமக்கேற்ப உதவிடச் செய்துவிடலாம் என்று நம்புகின்றார்கள்.

ஆனால் அதே மதங்களுடன் இணைந்து கொண்டே இறைவனை சம்பிரதாயங்களுக்கு அப்பால் நின்று உணர விழைவாரும் உண்டு என்பதையும் கருத்தில் வைத்துச் சிந்தித்தால்தான் ஆத்திகத்தின் ஆழம் தெரியாவிட்டாலும் அதன் உண்மையை மதிக்கும் மனப்பக்குவம் வரும்.

புதிதாக வருகின்ற பகுத்தறிவுவாதிகள் பலரும் இறைவனைச் சும்மா இல்லையென்பதும் குறை சொல்வதும் பிழை மட்டும் தேடுவதுமாக இருந்தால் அவர்களால் பகுத்தறிவும் வளராது அவர்களுக்கு உண்மையும் புரியாது.

பிராண வாயுவில்தான் உயிர் இருக்கின்றது. அதுதான் உயிருக்கான உத்தரவாதமாகவும் இருக்கின்றது. நீர் வாழ் உயிரினங்களுக்கும் அதுவே உயிராக இருக்கின்றது. ஆனால் அவற்றுக்கு நீரிலிருந்து அதனைப் பிரித்து எடுக்கும் சக்தி கொடுக்கப்பட்டு விடுகின்றது. நமக்கு இல்லை.

இங்கேதான் அறிவை நாம் பயன்படுத்தி அதனுள் பிராணவாயு நமக்கேற்றவிதத்தில் கிடைக்கும்படியாக வழி செய்து கொண்டு நீர்வாழ் உயிரினங்களுக்கு சமமாக இணைந்து நீருக்குள் நீந்துகின்றோம். நம்மைப் போல அவற்றுக்கு இயலாமல் இருக்கின்றது.

ஆனால் அடிப்படையில் நமது அமைப்பும் அவற்றின் அமைப்பும் நம்மையும் கேட்காமல் நமக்கே தெரியாமல் நம்மையும் மீறிய விதத்தில் நமக்காக இயங்கும்படியாக அமைக்கப்பட்டுள்ளமையை மறுக்க முடியாது.

அதன் காரணமென்ன?
எதற்காக நாம் இவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றோம்?
இதனால் யாருக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்க முடியும்?
எப்படி இல்லாவொன்றிலிருந்து இத்தனை விதங்களில் உருவங்களும் வண்ணங்களும் அமைப்புக்களுமாக உயிர்கள் அமைவது சாத்தியமாயிற்று?
எல்லாமே ஒன்றிலொன்று சங்கமமாகும் விதமாகவும் அனைத்துமே ஓர் அடிப்படையில் மட்டுமேயாகவும் அமைந்ததும் அமைந்து வருவதும் எப்படி?

இன்னும் இவ்வாறான பல கேள்விகளும் ஆராயப்பட்டு> ஆராயப்பட்டு> அடிப்படை அறிய முடியாத நிலையில்தான் இதற்கெல்லாம் அடிப்படையாக ஒரேயொரு மாசக்திதான் இருக்கின்றது என்றும் அதுதான் அனைத்தையுமே அமைத்து வகுத்து அடக்கி வழிநடத்தி வருகின்றது என்றும் நம்பிக்கை பிறந்தது.

இது மூடத்தனத்தினால் எழுந்த ஐதீகமல்ல. ஆழ்ந்த அறிவுடனான சிந்தனைகளின் முடிபாக எழுந்த தீர்மானமேயாகும்.

இதனை இன்றைய குறுகிய சூழ்நிலைகளை மட்டும் முன்னிருத்திச் சிந்தித்துக் கொண்டு> தான் நினைத்தவாறெல்லாம் அவதூறாகப் பேசுவதுதான் பகுத்தறிவு என்றால் அதை நியாயப்படுத்துவது நியாயமாகவே படவில்லை.

தன்னில் தானாகவே நிற்க முடியாதவனும் தனது நிலைப்பாட்டையே உறுதி செய்து இறுதி முடிவையறிய முடியாதவனுமாகிய மனிதன் தன்னை மிஞ்சிய சக்தியைத் தனது சிந்தனைக்குள் அடக்கி விளக்க முற்படுவதற்கும்….

கல்லுக்குள் இருக்கும் தேரை அதனை அதற்குள் உயிருடன் வைத்த சக்தியை விடவும் தான் அதற்குள் இருப்பதற்குத் தனக்கு இருக்கும் சக்தியே மேல் என்று மார்தட்டிக் கொள்வதற்கும் இடையிலே என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

முதலில் நம்பிக்கையென்றால் என்னவென்பது நமக்குச் சரியாகத் தெரிய வேண்டும். அதற்கு முன் எதுவுமே முழுமையாக இல்லையேல் அது அதுவாக இருப்பதல்ல என்பது தெரிந்திருக்க வேண்டும்.

கல்லென்றால் அது கல்hலகத்தானிருக்க வேண்டும். கல் Nghன்ற கல்லாக இருக்க முடியாது. அதுபோலவே நம்பிக்கை என்பது முழுமையாக> உண்மையான நம்பிக்கையாக மட்டும் இருந்தால்தான் அது நம்பிக்கையாக இருக்கும்.

அப்படிப்பட்ட நம்பிக்கை உண்மையை உணர்ந்து தெளிந்ததாக இருக்கும்.
இறைவனை உணர்ந்தவன் உலகத்தை உணர்ந்தவனாக இருக்க வேண்டும்.அப்படியல்லாதவனுக்கு இறைநம்பிக்கை இருக்கின்றதென்றால் அது முழுப்பொய்யாகவே இருக்கும்.

பசிக்குச் சோறு வேண்டியும் அடுத்தவனுக்குத் தீமை வேண்டியும் அதிர்ஷ்ட இலாபச் சீட்டில் வெல்ல வேண்டியும் என்று இறைவனை நம்புபவன் பக்தனல்ல. படுமூடன்.

அவனையும் அவனையொப்ப அறிவிலிகளையும் வைத்து இறைநம்பிக்கையை இகழ்வது பகுத்தறிவல்ல. பகுக்க அறியா அறிவீனமேயாகும்.

சில பகுத்தறிவுவாதிகள் சோம்பேறிகளே கடவுளை நம்புகின்றார்கள் என்கின்றார்கள். அது அறியாமையாகும். காரணம்> இயற்கையாகிய கடவுள் தந்திருக்கின்ற அனைத்திலும் பலனிருக்கின்றது. அதனை ஏற்றவிதமாக எடுத்து அனுபவிக்க முயலாதவன் கடவுளை நம்புவதனால் ஏமாறுவது அவனது குற்றமேயல்லாமல் நம்பிக்கையின் குற்றமல்ல.

ஓரே விதமாக இருவர் ஒரே செய்கைக்காக முயற்சித்தாலும் ஒருவர் வெல்ல இன்னொருவர் தோற்பது நடப்பது ஏன்?

ஒரே பேச்சு ஒருவருடன் நட்பையும் அதே பேச்சு இன்னொருவருடன் பகைமையையும் உருவாக்கிவிடுவது நடப்பது ஏன்?

ஒரே உணவு ஒருவருக்கு உணவாகவும் இன்னொருவருக்கு நஞ்சாகவும் ஒரே சமயத்தில் இருப்பது ஏன்?

ஒரு மண்ணில் விளைவது இன்னொரு மண்ணில் விளையாமை ஏன்?

இதற்கெல்லாம் காரணமுண்டு என்பதை எப்படியென்று கண்டு பிடிப்பதில் பெருமையில்லை. அதன் அடிப்படை ஏற்கனவே ஒரு சக்தியால் அதுவும் சரியான ஒரு காரணத்தோடுதான் அமைக்கப்பட்டு இருக்கின்றது என்பதை உணருகின்ற தகைமையைப் பெறுவதுதான் பெருமை.

ஏனெனில் அவற்றுக்குள் சில நியதிகளை உள்ளடக்கிய காரணங்களும் உண்டு. மர்மங்களும் உண்டு. அவற்றை அறிந்து கொள்ளத்தான் சில வழிகள் ஆன்றோராகிய முன்னோர்களினால் கண்டு பிடிக்கப்பட்டு முன் வைக்கப்பட்டன.

ஆனால் அவற்றைப் பின்வந்த சுயநலமிகள் பலரும் துர்ப்பிரயோகம் செய்தால் அதற்காக அந்தப் பிழைகளைச் சாடாமல் அந்த அரிய கண்டுபிடிப்புக்களையே மறுப்பது எப்படி நியாயம்?

இன்னும் இயற்கையின் எதையுமே அடிப்படையாக முழுமையாக அறிந்து கொள்ளாத நிலையிலே மட்டும் நிற்கும் விஞ்ஞானத்தை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு நம்பிக்கையின் அத்திவாரமான மெய்ஞானத்தை எதிர்ப்பதும் மறுப்பதும் சரியென்று வாதாடுவதே பகுத்தறிவு என்றால் அந்த அறிவுக்கு ஒரு சின்னஞ்சிறிய சவாலை விடுவது நல்லது என நான் நினைக்கின்றேன்.

நமது (உள்ளத்தை விடுங்கள்) உடலின் இயக்கத்தை நாமாகவே சில மணித்துளிகள் நிறுத்தி வைத்துவிடவும் மீண்டும் இயங்க வைத்துவிடவும் இயலுமா?

சிலவேளை சில விஞ்ஞானபூர்வமான ஏற்பாடுகளுடன் இனிவரும் ஒருநாள் இயலலாம். ஆனால் அது தானாக இயங்காமல் நம்மையும் மீறி நமக்காக இயங்குவதைத் தானாகவே நிறுத்திக் காட்டுங்கள் அல்லது இயக்கிக் காட்டுங்கள்.

உங்கள் அறிவை மதிக்க மறுக்கவில்லை. ஆனால் நமது அறிவுக்கும் அப்பால் அதனைக் கடந்த நிற்கும் ஓர் அறிவு இருக்கின்றது. அதுவே இயற்ifயென்னும் இறைவன். அதன் மீது அல்லது அவன் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தால்தான் அதற்கு நல்லது என்று அது சொன்னதே இல்லை.

மனிதனுக்குத்தான் அதன் தேவை தேவையாக இருக்கின்றது. அந்த நம்பிக்கை தருகின்ற மன அமைதியையும் ஆறுதலையும் நிம்மதியையும் உணர்வுபூர்வமாக அனுபவித்த அனுபவமில்லாமல் வெறுமனே கொச்சைப் படுத்துமுன் ஒன்றைச் செய்யுங்கள்.

அவர்களுக்கு நிம்மதிக்கும் அமைதிக்கும் இயல்பான ஒரு வழியைக் காட்டுங்கள். அதுவும் எல்லாருக்கும் எப்போதும் எங்கேயும் எவ்விதத்திலும் பயன் தரும் என்கின்ற உத்தரவாதத்துடன் காட்டுங்கள்.

அதன் முழுமை உண்மையானால் பகுத்தறிவு வென்று இறை நம்பிக்கை மறையும் என்கின்ற உத்தரவாதம் இருந்தால் இறைவனைக் கைகழுவும் முதல் இறை நம்பிக்கையுள்ள மனிதன் என்கின்ற இடத்தை நானே முன்னின்று வகித்துக் காட்டுகின்றேன்.

இது மதவெறியினாலோ குருட்டு பக்தியினாலோ பகுத்தறிவு எதிர்ப்பினாலோ எழுகின்ற வார்த்தைகளல்ல. சரியாக பகுத்து அறியும் ஆற்றல் யாரிடமிருக்கின்றது என்கின்ற ஐயத்தினால் எழுகின்ற வார்த்தைளேயாகும்.

காரணம்> சுறுசுறுப்புக்கும் உழைப்புக்கும் உறுதுணை நிற்கும் சாதாரண உழைப்பாளிகளில் நாங்களும் அடங்குகின்றோம்.

தாங்கள் கடவுளை நம்புவதாகச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு தாங்களும் ஏமாறும் சோம்பேறிகளின் வரிசையிலில்லாதவர்கள்.


தமிழமுதம்

Thursday, 25 November 2004
posted by Unknown @ 9:34 PM  
0 Comments:
Kommentar veröffentlichen
<< Home
 
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்